Friday, July 19, 2013

Mariyaan - Review

மரியான் - அதாவது வுட்லேண்ட்ஸ் தியேட்டர்ல 11.30 காட்சி பாத்துட்டு வெளிய வந்த மக்கா கோரஸா "வேணாம்... போகாதீங்கன்னு" கத்தின்னு போனப்பவே சுதாரிசிருக்கணும்.. நமக்குதான் மத்தவன் எது சொன்னாலும் புடிக்காதே... 2.30 ஷோவ்க்கு ஆபீஸ கட் அடிச்சிட்டு உள்ள போய் ஒக்காந்தோம்.. ஒக்காந்தோமா.....
படத்தோட முதல் பாதி... ஜவ்வா போகுது... ஆனா அந்த ஜவ்வயும் சகிச்சின்னு பாத்ததுக்கு ஒரு காரணம்... ஒரே காரணம்.... பார்வதி.. பூ படத்துல வந்த பொண்ணா இது... ஒரு பக்கம் பாத்தா நயன்தாரா மாதிரி இருக்கு... இன்னொரு பக்கம் சமந்தா மாதிரி இருக்கு... ம்ம்... நீ எல்லாம் நல்லா வருவம்மா.... மத்தபடி தனுஷ வெரட்டி வெரட்டி காதலிக்கற கேரக்டர்.. நல்லா அழுவுது... முத்தம் குடுக்குது.. சண்ட போடுது... இப்படி சுகம்ம்மா போற காதல்ல ஒரு வில்லன் வரான்.... வில்லன் கிட்ட இருந்து பார்வதியோட அப்பன் வாங்கன கடன அடைகறதுக்காக தனுஷ் ரெண்டு வருஷம் சூடான் நாட்டுக்கு வேல செய்ய போறாரு..... ரெண்டு வருஷம் போன்லயே காதல வளத்துட்டு.. ஒரு வழியா காண்ட்ராக்ட் முடிஞ்சி திரும்பி வர சமயம் பாத்து இவர சூடான் நாடு முட்டாள் தீவரவாதிங்க நாலு பேரு கத்தின்னே கடத்துறாங்க..... இதோட இண்டர்வல் போட்டுட்டான்... சரி, இது வரைக்கும் கத மொக்கையா போச்சு.. இனிமேலு சூடான் நாட்டுல எஸ்கேப் பிளாக் செமையா இருக்கும்னு ஒரு பாப்கார்ன் வாங்கிட்டு ஒக்காந்தா... அந்த கொடுமைய ஏன் கேக்கறீங்க...

சூடான் நாடு முட்டாள் தீவரவாதிங்க இவர கடத்தி, ஆபீஸ்க்கு போன் போட்டு பணம் கேக்க சொன்னா ... அந்த ரணகளத்துலயும் இவரு பார்வதிக்கு போண போட்டு கடலை போடறாரு....அப்புறம் பாட்டெலாம் பாடி தப்பிகிறாரு... தப்பிச்சி.. ஓடறாரு.. ஓடறாரு... ஓடறாரு.... திக்கு தெரியாத பாலைவனத்துல கண்டமேனிக்கு ஓடறாரு.... சிறுத்தை எல்லாம் வருது... ஆனா எதுக்குன்னு தான் நமக்கு தெரில...கடைசில ஒரு கட்டத்துல ப்ரோட்டீன் தேவைக்காக கோரப்புல் எல்லாம் சாப்பிடறாரு.. (மேன் Vs வைல்ட் மாதிரி... பியர் க்ரில்ஸ் இந்த படத்த பாத்தா நாண்டுகிட்டு சாவான்)... இதுக்கு மேல ஓட முடியாதுன்னு பாலைவனத்துல மயங்கி விழும் போது பார்வதி அம்சமா டிரஸ் பண்ணிட்டு வந்து "என் புள்ளைக்கு நீ தான் அப்பாவா இருக்கணும்"ன்னு தேவ இல்லாம உசுப்பேத்திட்டு மறையறாங்க... உடனே நம்மாளு "நெஞ்சே எழு"ன்னு ஒரு சாங்க போட்டுட்டு மறுபடியும் எழுந்து ஓடறாரு... நான் கூட அப்படியே சூடான்ல இருந்து 
இந்தியா வரைக்கும் ஓடிடுவாரோன்னு பயந்துட்டேன்... புதுகோட்டை சரவணன்ல சீனா பார்டர நடந்தே கிராஸ் பண்ணவராச்சே... இதுலயும் பண்ணிட்டா? நல்லவேல அப்படி பண்ணல... ஓடி ஓடி... கடசியா சூடான் பீச்க்கு வராரு.... அய்யயோ ஒருவேள நீந்தியே கிராஸ் பண்ண போறாரோன்னு பாத்தா..அதுவும் இல்ல... பைட் சீன் வருது.. அங்க அந்த மொக்க வில்லன இடுப்புல அடிச்சி காலி பண்ணிட்டு.. மயங்கி விழுந்து... சூடான் மீனவர்கள் இவர காப்பாத்தி... இந்தியாக்கு திரும்ப வந்து... பார்வதி கூட சேர்ந்தாரா என்பதை வெள்ளித்திரையில் காண்க...

ஏ.ஆர்.ரெஹ்மான் இருக்காரு.. ஆனா இல்ல.. கடல் படத்துக்கு அப்புறம் சில நல்ல பாட்டுங்கள இந்த படத்துலயும் வேஸ்ட் பண்ணிருக்காங்க... ஆனா கடல் அளவுக்கு மொக்க போடலங்க்றது ஆறுதல்... "எங்க போன ராசா" பாட்டு.. நல்ல விஷுவல்ஸ்.. தனுஷ் ஆக்டிங் கிளாஸ்... அங்கங்க சூப்பர் ஸ்டார் ஸ்டைல் தெரியுது.. மத்தபடி குடுத்த காசுக்கு பார்வதிய நல்லா பாத்தோமா வந்தோம்மான்னு இருக்கணும்.. தேவ இல்லாம படத்துல கதை எல்லாம் தேட கூடாது....

5.30 மணிக்கு தியேட்டர விட்டு வெளிய வரும் போது நாங்களும் "வேணாம்... போகாதீங்கன்னு" கத்தினே தான் வந்தோம்... மத்தவனுக்கு தான் நாம எது சொன்னாலும் புடிக்காதே... விதி வலியது...

1 comment: